பேஸ்புக் மூலம் மாப்பிள்ளை தேடிய கேரள பெண் !

சமூக வலைதளமான பேஸ் புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்து கொள்ளவும் தான் பயன்படுத்து கிறார்கள்.
பேஸ்புக் மூலம் மாப்பிள்ளை தேடிய கேரள பெண் !

ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, மெட்ரிமோனி தளமாக பயன் படுத்தி யுள்ளது வைரலாகி யுள்ளது.

Malappuram - இல் வசித்து வரும் ஜோதி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

எனது பெயர் ஜோதி. வயது 28. எனக்கு பெற்றோர் கிடையாது. Fashion Designing படித்து முடித்துள்ள எனக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். 

நண்பர்களே...உங்களுக்கு தெரிந் தவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரியப் படுத்துங்கள்.ஜோதிடம், சாதி இவைகளை நான் பார்ப்பதில்லை என பதிவிட் டுள்ளார். 

இதனுடன் தனது அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோரின் படிப்பு அவர்கள் செய்யும் வேலை யையும் குறிப்பிட் டுள்ளார். ஏப்ரல் 26 ஆம் திகதி இவர் பதிவிட் டுள்ளார். இந்த பதிவானது 6,000 shares பெற்றுள்ளது. 

மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்கு க்கும் சேர்த்து ஒரு பதிவினை பதிவிட் டுள்ளார். 

அதில் என்னை போன்ற தங்களது வாழ்க்கை துணையை தேடிக் கொள்வதற்கு உதவியாக FBMatrimony என்ற வசதியை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பேஸ்புக் மூலம் மாப்பிள்ளை தேடிய கேரள பெண் !
இது சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவும் என கோரி யுள்ளார். பேஸ் புக்கில் புகைப் படத்தை பதிவிடவே பெண்கள் பயந்து கொண்டிரு க்கையில், துணிச்சலாக தனது புகைப்படம் 

மற்றும் விவரங் களை பதிவிட்டு அனை வரையும் ஆச்சரிய த்தில் ஆழ்த்தி யுள்ளார் இப்பெண்.
Tags:
Privacy and cookie settings