கேரள மாநிலத்தில் வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,
'நிபா வைரஸ் காற்று மூலம் பரவாது' எனக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி யிருக்கிறது.
இந்த நிலையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா செய்தி யாளர்களிடம் கூறுகையில், 'நிபா வைரஸ் பாதித்த நோயாளி களை உடனடியாகக் குணப்படுத்தும் மருந்து இது வரை இல்லை.
ஆனால், பரவுவதை வைரஸ் தடுக்கும் நடவடி க்கைகளை எடுத்து வருகிறோம். நோய் பாதித்தவரின் ரத்தம், சளி, வியர்வை மூலம் மற்றவர் களுக்கு நோய் பரவுகிறது.
காற்று மூலம் இந்த வைரஸ் பரவாது என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். வௌவால் தவிர, பிற மிருகங்கள் மூலம் நோய் பரவுவது இது வரை உறுதி செய்யப்பட வில்லை.
நோய் பாதித்தவர் களுக்கு சிகிச்சைக் கான அனைத்து நடவடிக்கை களையும் மாவட்ட கலெக்டர் மூலம் அரசு எடுத்துள்ளது.
வௌவால் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிய பிறகே உணவருந்த வேண்டும். பழங்களை வென்னீரில் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்' என்றார்.
இதனிடையே, கோழிக் கோட்டில் நிபா வைரஸ் தாக்கி இறந்த முகம்மது ஸாபித் சகோதரர் களின் வீட்டை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது வீட்டு உபயோ கத்துக்கு பயன் படுத்திய குடிநீர் கிணற்றில் வெளவால்கள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதை யடுத்து அந்த கிணறு மூடப்பட்டது. திறந்து கிடக்கும் குடிநீர் கிணறுகள் மீது வெளவால்கள் பறக்கும் என்பதால் அவற்றை மூடி வைக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Thanks for Your Comments