பலப்படு த்தாமல் பலவீனப் படுத்துகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் யசோதா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறிய தாவது:
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு புதிய வரவு. மிகவும் துடுக்காக பேசுகிறார். இந்த துடுக்கான பேச்சை எதிர்கட்சிகளிடம் தான் காட்ட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்களை விமர்சனம் செய்வது நல்லதல்ல.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக் கரசரை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தான் நியமித் துள்ளனர்.
அவரது நடவடிக்கை பிடிக்க வில்லை என்றால் குஷ்பு மேலிடத்தில் தான் புகார் செய்ய வேண்டும்.
அதை விடுத்து அவரை பற்றி விமர்ச்சிப்பதற்கு குஷ்புவுக்கு தகுதி யில்லை. சத்திய மூர்த்திபவன் வருதில்லை என்று கூறுகிறார்.
காமராஜரால் உருவாக்கப் பட்ட இந்த சத்திய மூர்த்தி பவன் தான் கட்சிக்காரர் களுக்கு தாயகம்.
அப்படிப் பட்ட சத்திய மூர்த்தி பவனுக்கு வர விரும்ப வில்லை என்று குஷ்பு கூறுவது அனுபவம் பத்தாது என்று தான் சொல்ல வேண்டும்.
காங்கிரசோடு அவர் ஒன்ற வில்லை. காங்கிரசை பலப்படுத்து வதற்காக தான் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் அவர் பலவீனப் படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அகில இந்திய சோனியா காந்தி
நற்பணி பேரவை சார்பில் 71 ஜோடிகளு க்கு இலவச திருமண விழா வரும் 20ம்தேதி தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது ஏற்பாட்டில் நடக்கிறது.
இதில் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கூறினார்.
Thanks for Your Comments