தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர்
சனிக்கிழமை திடீரென சந்தித்து சுமார் 2 மணி நேரங்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளின் தலைவர் களும் எல்லையோரம் அமைந்துள்ள தென் கொரிய பகுதியில் சந்தித்துப் பேசினர்.
வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையில் பேசுவது இதுவே முதன் முறையாகும்.
அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சந்திப்பு வெற்றி கரமாக அமைவது தொடர் பாகவே
இந்த பேச்சு வார்த்தை நடை பெற்றதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
இருப்பினும் இந்த சந்திப்பின் முழுக் காரணம் மற்றும் சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தைகள் தொடர்பான விவரங்களை
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஞாயிற்றுக் கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித் துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தை தொடர்பாக
ஆலோசிக்கப் பட்ட நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலை யில், ஜூன் 12-ஆம் தேதிக்குள் இரு நாடுகளின் தலைவர் களும் சந்திக்க வாய்ப் புள்ளதாக டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.
Thanks for Your Comments