ரயிலில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி... மக்கள் செய்த காரியம் !

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முன் சில்மிஷத்தில் ஈடுபட்ட அருவருப்பான 
ரயிலில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி... மக்கள் செய்த காரியம் !
சம்பவத்தை அடுத்த சகபயணிகள் அந்த காதல் ஜோடியை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் சாந்தினி சவுக் என்ற பகுதியில் இருந்து டம்டம் என்ற பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று ஏறி இருக்கை யில் அமர்ந்தனர்.

ரயில் கிளம்பிய சில வினாடி களில் இருவரும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது உள்பட சில்மிஷங் களில் ஈடுபட்டனர்.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சக பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை கண்டு கொள்ளாமல் காதலர்கள் கருமமே கண்ணாக இருந்தனர்.

இந்த நிலையில் ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்ற போது சக பயணிகள் அந்த காதல் ஜோடியை அடித்து உதைத்து ரயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர். 
அதன் பின்னர் தான் அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிந்தது.

இருப்பினும் இந்த காதல் ஜோடியை தாக்கிய வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings