ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மன்சூர் அலிகான் !

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்று உள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மன்சூர் அலிகான் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப் பட்டு மக்கள் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப் படுவதாக கூறி அந்த 

ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையை சுற்றி யுள்ள பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமை யில் உள்ள அ.குமரெட்டியா புரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்ட த்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 

அவர்களது போராட்டம் இன்று 83&வது நாளை எட்டியுள்ளது. அவர்களது போராட் டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் தமிழ் மாந்தன் தலைமையில் 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப் பட்டு இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், 

சுற்றுச் சூழல் பாதிப்புக்கு காரண மாக ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரி களை கைது செய்ய வேண்டும், தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவ குழு அமைக்க வேண்டும், 
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், 

பொது மக்கள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
Tags:
Privacy and cookie settings