பாலத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள் !

தெலுங்கானா மாநிலத்தின் எல்லை யோரங்களில் உள்ள சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மாவோயிஸ்ட் களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
பாலத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள் !
அதில் மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு தலைவர்கள் கொல்லப் பட்டு வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் பாலத்தை வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட த்தின் செர்லா மண்டல பகுதியில் உள்ள பத்ராசலம் - செர்லா செல்லும் பாலத்தை நேற்று நள்ளிரவில் மாவோ யிட்டுகள் வெடி வைத்து தகர்த்தனர்.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பாலம் தகர்க்கப் பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாரு க்கு தகவல் தெரிவித்தனர். 

இதை யடுத்து அங்கு சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொது மக்கள் பயன் படுத்தி வந்த பாலத்தை மாவோயிஸ்ட்கள் வெடி வைத்து தகர்த்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings