சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பொது மக்களுக்கு இலவசம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வாசிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் வெள்ளியன்று துவக்கி வைக்கப் பட்டுள்ளன.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் மெட்ரோ
மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை - ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் பயணிகள் சேவைகள் துவக்கி வைக்கப் பட்டது.
பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப் பேட்டை மெட்ரோ, நந்தனம்,
தேனாம் பேட்டை மற்றும் ஏஜி - டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங் களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பொது மக்களுக்கு இலவசம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் துவக்கி வைக்கப் பட்டுள்ளதை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப் படுவதாக நிர்வாக தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments