இந்து கடவுள் படத்துடன் திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்த முஸ்லீம் !

உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள பக்சாரி கிராமத்தைச் சேர்ந்த முகமத் சலீம் என்பவரின் மகள் ஜகனா பானுவிற்கு கடந்த 29-ம் தேதி திருமணம் நடை பெற்றது. 
இவர்கள் திருமணத்திற் காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்தனர். சலீமிற்கு இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் அதிகம் இருந்தனர். 

அவர் தனது நண்பர் களுக்காக புதிய முயற்சி யில் ஈடுபட்டார். தனது முஸ்லீம் உறவினர் களுக்காக முஸ்லீம் முறைப்படி 300 அழைப்பி தழ்கள் அச்சடித்தார். 

அதே போல் இந்து முறைப்படி இந்து கடவுள் களின் புகைப்படம் அடங்கிய அழைப்பிதழ் களை அச்சடித்து தனது நண்பர் களுக்கு வழங்கினார். 

சலீமின் இந்த செயல் மத நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய முகமத் சலீம், என்னுடைய புதிய முயற்சி இந்து மக்கள் முஸ்லீம் மக்களுக்கு இடையே பாலமாக அமையும். 
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாம் இந்து சகோதரர் களுக்கு மரியாதை அளித்தால், அவர்களும் முஸ்லீம் மக்களுக்கு மரியாதை செலுத்து வார்கள்' என கூறினார். 

எவ்வித மத பாகுபாடின்று சலீம் மேற்கொண்ட முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:
Privacy and cookie settings