50 வயதுக்கு மேல் பிரஸ்ஸர் மாத்திரைகள் போட்டுக் கொள்ளாத மனிதர்கள் இப்போது அரிதாகி வருகிறார்கள்.
பிரஸ்ஸர் மாத்திரைகள் என்பவை ரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்த தினந் தோறும் உட்கொள்ளு மாறு மருத்துவ ர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன. இந்த மாத்திரை களைப் போட்டுக் கொள்ளாமல்
இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தை குறைக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்றால், இல்லாம லென்ன தினமும் ஆலிவ் இலைச் சாற்றுக்கு ரத்த அழுத்த த்தைக் குறைக்கும் திறன் உண்டு என
மருத்துவக் குழு ஒன்று தங்களது 8 வார தொடர் ஆய்வொன்றில் கண்டறிந் துள்ளது.
ரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்துவதற்காக தற்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கேப்டோப்ரில் லுடன் ஒப்பிடுகையில்
ஆலிவ் இலைச்சாறு சிஸ்டோலிக் ரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் வரை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பு:
ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளி யேற்றப்பட்ட
ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக் கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர் டென்சன் என்கிறோம்.
இது இரண்டு எண்ணிக்கை யில் குறிப்பிடப்ப டுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும்.
உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.
பொதுவாக ஒரு மனிதனுக்கு 120/80 என்று ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ரத்த அழுத்தம் 140/90 என மாறும் போது ஹைபர் டென்சன் என்று குறிப்பிடப் படுகிறது.
Thanks for Your Comments