தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு - மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் !

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான தேசிய தகுதி 

மற்றும் நுழைவு த்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்து கிறது.

அந்த வகை யில் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாளை மறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. 

இந்த தேர்வில் பங்கேற்க விண்ண ப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியா குமரி உள்ளிட்ட சில மாவட்டங் களை சேர்ந்த 

மாணவர் களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங் களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. 

தமிழக அரசியல் கட்சி தலைவர் களும் தங்களுடைய கடுமை யான கண்டனங் களை பதிவு செய்து ள்ளனர். 

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற் கொள்ளப் பட்டுள்ள தால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. 


ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாமக்கல், சேலம், 

திருவள்ளூர், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர் களுக்கு சி.பி.எஸ்.இ. பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். ஆனால் மாணவர்கள் 9.30 மணிக்குள் தேர்வு மையத்தி ற்குள் இருக்க வேண்டும். 

9.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்து க்குள் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக் கப்பட மாட்டார்கள். 

‘நீட்’ இணையதள பக்கத்தில் உள்ள நேரம் எல்லா மையங் களிலும் பின் பற்றப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ, மாணவி களுக்கு கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டு உள்ளன. அந்த விவரங்கள் வருமாறு:-

* வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ் எடுத்துச் செல்லக் கூடாது.

* பிளாஸ்டிக் பை, கால் குலேட்டர், அளவுகோல், பரீட்சை அட்டை, பென் டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, பேனா, ஸ்கேனர் எடுத்துச் செல்லக் கூடாது.


* கைப்பை, மணிபர்ஸ், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், கண்ணாடி, கேமரா, உலோக பொருட்கள், சாப்பிடும் உணவுகள், தண்ணீர் பாட்டில் அனுமதி கிடை யாது.

* மோதிரம், காதணி, மூக்குத்தி, சங்கிலி, ஹேர் கிளிப், தலை முடியில் மாட்டும் பெரிய ரப்பர், வளையல் உள்ளிட்டவை தடை செய்யப் பட்டுள்ளது.

* செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோ போன், பேஜர் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* வெளிர் நிறத்தி லான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம் பெறக் கூடாது.

* சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். 

மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணி களுக்கு, ஷூ-க்கு அனுமதி கிடையாது.

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் பொருட் களை வைப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யப் பட்டிருக்காது.
* கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத் திற்குள் இருக்க வேண்டும்.

* சேலை அணிந்து வரக் கூடாது.

மேற்கண்ட விதிமுறை களை பின்பற்றப் படாத மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings