மருத்துவப் படிப்புக் கான நீட் தகுதித் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடக்க விருக்கிறது.
இதற்கு இன்னமும் மூன்று நாள்களே உள்ள நிலையில் விண்ணப்பித்த மாணவர் களுக்கு வெளி மாநிலங் களில்
நீட் தேர்வு மையங் களை ஒதுக்கீடு செய்திருக்கிறது தேர்வை நடத்தும் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
தமிழக மாணவர் களுக்கு நீட் தேர்வி லிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம்.
இதன் மூலம் கடந்த ஆண்டு கடும் இழு பறிக்குப் பின்னர் தமிழக மாணவர்கள், நீட் தேர்வின் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்த போது, தமிழக மாணவர் களுக்கு தெலங்கானா வில் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கியது சி.பி.எஸ்.இ.
இதனைச் சுட்டிக் காட்டி தமிழக த்தில் 10 மையங்க ளை ஒதுக்கீடு செய்தது சி.பி.எஸ்.இ.
இரண்டு வாரங் களுக்கு முன்பு நுழைவுத் தேர்வுக் கான ஹால் டிக்கெட் வழங்கிய போது, மாணவர் களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்ட மாணவர் களுக்கு நீட் தேர்வு மையங் களை கேரளாவி லும், ராஜஸ் தானிலும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த போது, `தமிழக மாணவர் களுக்குத்
தமிழகத் திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதி மன்றம்.
தனது தீர்ப்பில் `அண்டை மாநிலங் களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டால், மாணவர்கள் மன தளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப் படுவர்.
எனவே, கூடுதல் தேர்வு மையங் களை ஏற்படுத்தி தமிழக மாணவர் களுக்குத் தமிழகத்து க்குள் தேர்வு மையங் களை ஒதுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டி ருந்தது.
இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில், `தமிழக மாணவர் களுக்கு,
தமிழகத் திலேயே தற்போது தேர்வு மையங் களை அமைக்க அவகாசம் இல்லை' என்றும்,
`தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப் பட்டுள்ள தால்,
இதில் மாற்றம் செய்ய முடியாது' என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நீதி மன்றத்தில் தெரிவிக்க, இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதி மன்றம்,
இன்று தனது தீர்ப்பில், `ஏற்கெனவே ஒதுக்கிய தேர்வு மையங் களில் தாம் நீட் தேர்வு எழுத வேண்டும்' என்று உச்ச நீதி மன்றமும் உத்தர விட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் மூலம் தமிழக மாண வர்கள் வெளி மாநிலங் களுக்குச் சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஏதேனும் மனுத் தாக்கல் செய்யுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.