நெல்லை, கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கம் ரத்து !

0
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப் பட்டிருந்த நிலையில், 
நெல்லை, கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கம் ரத்து !
நெல்லை மற்றும் கன்னியா குமரி மாவட்டங்களில் மட்டும் இணையசேவை தொடர தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தூத்துக் குடியில் இயங்கி வரும் வேதாந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப் பட்ட மாபெரும் நூறாவது நாள் போராட்ட த்தில் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை யடுத்து தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க, நெல்லை, கன்னியா குமரி, தூத்துக்குடி 
ஆகிய 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங் களுக்கு தமிழக உள்துறை உத்தர விட்டிருந்தது.

இதனால் முக்கிய அலுவலக பணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். இன்ஜீனியரிங் கவுன்சலிங் ஆன்லைனில் விண்ணப்பக்க முடியாமல் மாணவர்கள திணறினர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில், இன்ஜீனியரிங் கவுன்சலிங் விண்ணப்பிக்க 

கடைசி தேதி தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், இணையதள சேவை முடக்கப் பட்டது ஏன் என்று நீதிபதிகள் கேட்டனர்.

கலவரம் ஏற்பட்டது தூத்துக்குடி மாவட்டத் தில். ஆனால், மூன்று மாவட்டங் களில் எதற்காக இணையதள சேவை முடக்கப் பட்டது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதை யடுத்து, நெல்லை கன்னியா குமரி மாவட்டஙகளில் இணையதள சேவை முடக்கிய உத்தரவை ரத்து செய்து தமிழக உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

இரு மாவட்டங்களில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கணினி வாயிலாக அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings