திருப்பூர் அருகே, சாலை விபத்தில் மகன் உயிரிழந்த துயரம் தாங்க முடியாமல், பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நிசாந்த். இவர், ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலை யில், நேற்றைய தினம் நிசாந்த் தன் உறவினர் கிருபாகரன் என்பவருடன் பைக்கில் கோவை பாஸ்போர்ட் அலுவல கத்துக்குச் சென்று விட்டு, மாலையில் மீண்டும் நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவிநாசி அருகே தேசிய நெடுஞ் சாலையில், பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோவில் இருந்து, எதிர்பாரா விதமாக இயந்திரக் கம்பிகள் சரிந்து விழுந்திருக்கிறது.
இதனால், ஆட்டோவை சாலை யிலேயே நிறுத்தி விட்டு, இயந்திரத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் அதன் ஓட்டுநர்.
நிசாந்த்
அப்போது, கோவையில் இருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த நிஷாந்தின் பைக், சாலையில் இருந்த அந்த இயந்திரத்தின் மீது படுபயங்கர மாக மோதியது.
இந்த விபத்தில், பைக்கில் வந்த நிஷாந்தும் கிருபாகரனும் பலத்த காய மடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு, இருவரையும் அவிநாசி மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பின்னர், இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக் காக அவிநாசி அரசு மருத்துவ மனையிலேயே வைக்கப் பட்டிருந்தது.
பின்னர், சம்பவம் குறித்துத் தகவலறிந்த நிஷாந்தின் பெற்றோரும் உறவினர் களும் அதிர்ச்சியுடன் அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு விரைந்து வந்தனர்.
அப்போது, பிணவறையில் கிடத்தப் பட்டிருந்த நிஷாந்தின் உடலைப் பார்த்து துக்கம் தாளாமல் அனைவரும் கதறி அழுதனர்.
ஒரு கட்டத்தில், மிகவும் வேதனை யடைந்த தந்தை சக்திவேலும் தாய் சுதாவும், நள்ளிரவு அவிநாசி அரசு மருத்துவ மனையிலேயே குளிர் பானத்துக்குள் விஷம் கலந்து குடித்திருக் கிறார்கள்.
பெற்றோர்
பின்னர், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக் காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கு கவலைக்கிடமாக நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவரும், இன்று அதிகாலை யில் சிகிச்சை பலனளிக் காமல் மருத்துவ மனையிலேயே உயிரிழந்தனர்.
ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த ஒரே மகனை சாலை விபத்தில் பறி கொடுத்து விட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையின் முதற் கட்ட விசாரணையில், நிஷாந்தும் கிருபாகாரனும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்தது தெரிய வந்தது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Thanks for Your Comments