பிரதமர் மோடியை விமர்சிப்பது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். 25 வயது இளைஞரான இவர், திருப்பூர் குப்பாண்டம் பாளையத்தில் உள்ள தனியார் சாயப் பட்டறையில் மோட்டார் மெக்கானிக் காகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலை யில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, பிரபாகரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியைத் தவறாகச் சித்திரித்து ஒரு படத்தை பதிவிட் டிருந்தார்.
அதில் ஆடை அணியாத மோடி, சிறு பூந்தொட்டி ஒன்றை வைத்து தன் உடலை மறைப்பது போன்று சித்திரிக்கப் பட்டிருந்தது.
இந்தப் பதிவு நாட்டின் பிரதமரைக் கொச்சைப் படுத்துவது போல் இருப்ப தாகவும், மோடியை ஆபாச மாக மார்பிங் செய்து ஃபேஸ் புக்கில் பதிவிட்டி ருக்கும் நபரைக் காவல் துறை
உடனடி யாகக் கைது செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப் பட்டது.
புகாரைப் பெற்றுக் கொண்ட திருப்பூர் வடக்குக் காவல் துறையினர் சம்பந்தப் பட்ட இளைஞர் பிரபாகரனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்திருக் கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சின்ன சாமி, ``புகார் குறித்து உடனடி யாக நடவடிக்கை எடுத்த காவல் துறையை வெகுவாகப் பாராட்டு கிறோம்.
நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவரைப் பற்றி தவறாகப் பதிவிடும் இது போன்ற செயல் களை இனி யாரும் செய்ய மாட்டார்கள் என எண்ணு கிறோம்.
அதே சமயம் கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் சிலர், என்னுடைய தொலைபேசி எண்ணு க்குத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கி றார்கள்.
மிகவும் தரம் தாழ்ந்த கொச்சையான வார்த்தைகளால் பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் களையும் திட்டு கிறார்கள்.
மேலும் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவின் செல்போன் எண்களைக் கேட்டு வற்புறுத்து கிறார்கள்.
இரவு 2 மணிக் கெல்லாம் செல்போனில் அழைத்து தவறான வார்த்தை களால் பேசுவது என்னை மன உளைச் சலுக்கு ஆளாக்கு கிறது. இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித் துள்ளேன்.
காவல் துறை அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.