இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.
இதில் மெர்கலின் தந்தைக்கு பதிலாக இளவரசா் சார்லஸ், மெர்கலுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
மெர்கலின் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக, சார்லஸ் தலைமை தாங்கினார் என்று தெரிய வருகிறது. பின்னா் இவா்களின் திருமணத்திற்காக அமெரிக்காவே இங்கிலாந்துக்கு திரண்டு வந்து உற்சாகப் படுத்தினா்.
மேலும், பல்வேறு பிரபலங்களும் அரச குடும்ப உறுப்பினா்களும் வந்து தங்களுடைய வாழ்த்துகளை மழை போல் பொழிந்தனா். இருவரும் முதலில் தேவாலயத்திற்கு மணக்கோலத்தில் வந்தனா்.
பிரிட்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயமே திருவிழா போல் காட்சி அளித்தது. இந்த திருமணத்தில் மட்டும் பல லட்ச மக்கள் பங்களித்தனா்.
பின்னா் தேவாலயத்தில் பல்வேறு பாடல்கள் மற்றும் அவா்களுக்கு உரிய திருமண சட்டங்கள் வழக்கமாக நடைபெற்றன.
வழக்கமான திருமணம் போல் இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டதால் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் தேவாலயங் களுக்கு என குறிப்பாக உள்ள அனைத்து சமய ரீதியான பல்வேறு திருச்சபைகள் ஆலயத்தில் திருமண தம்பதியின் முன்பு நடத்தப் பட்டன.
இந்நிலையில் கடைசி தருவாயில் இளவரசா் ஹாரி நடிகை மேகன் மெர்கலை தன்னுடைய மனைவியாக ஏற்று கரம் பிடித்தார்.
Thanks for Your Comments