ஸ்டெர்லைட் போராட்டத் தில் நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு களுக்குத் தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித் திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக் கோரி தூத்துக்குடி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 21-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற வர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
144 தடை உத்தரவை மீறி பொது மக்கள் பேரணியாகச் சென்றனர். டி.ஐ.ஜி, கபில் குமார் சாரட்கர் தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக் குடியில் பாது காப்புக்காகக் குவிக்கப் பட்டனர்.
ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங் களைச் சேர்ந்த பொது மக்கள் திரண்டதால், போலீஸாரால் அவர்களைக் கட்டுப் படுத்த முடிய வில்லை.
கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டு வீசிய போதிலும் கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்து க்குள் நுழைந்தவர்கள், அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
அதோடு, அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால், பதற்றம் அதிகரித்தது.
இதை யடுத்து போலீஸார் போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி வெனிஸ்டா உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
காவல் துறையின் காட்டு மிராண்டித் தனமான செயல் இது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாகப்
பதவி விலக வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலை யில், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளதாவது, மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக
இன்று பொது மக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கது, கண்டிக்கத் தக்கது.
நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்பு களுக்குத் தமிழக அரசே பொறுப்பு’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments