தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி களத்தில் நின்ற பெண்ணின் பதிவு | Register of woman standing on the floor about the shooting of Thoothukudi !

0
போலீஸ் வருவாங் கன்னு இப்பவும் ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றா என் பொண்ணு" எனப் பேசத் தொடங்கு கிறார், 
சமூகச் செயற் பாட்டாளர் ரோசி மது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக் குடியில் போராடிய 

பொது மக்களின் மீது காவல் துறையினர் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதில், 13 பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப் படுகிறது. 

அன்றைய தினம், மூன்றரை வயது மகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையி லிருந்து 

சென்றிருக் கிறார், ரோசி மது. தான் கண்டவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தூத்துக்குடி - ரோசி மது

"குமரெட்டியா புரத்தில் அமைதி வழிப் போராட்டம் நடந்த போதே, அங்கே போயிருந்தேன். 

பகலில் வேலைக்குப் போற வங்களும் சாயந்திரம் போராட்டக் களத்துக்குத் தவறாமல் வந்துடுவாங்க. 

கேன்சரால் இறப்பவர்கள் என்பது, மாதம் தோறும் என ஆரம்பிச்சு, வாரா வாரம் என்றாகி, 

தினந்தோறும் என்கிற அளவுக்கு மாறிடுச்சுனு அங்கிருந்த வங்க சொன்னாங்க. 

அங்கி ருக்கும் பெண்கள் சொல்லும் விஷயங் களைக் கேட்கும் யாராலும் ஜீரணிக்கவே முடியாது. 

கரு கலைவது ரொம்ப ரொம்ப சாதாரண நிகழ்வா இருக்கு. 

மதுரையில் இருக்கும் போது, ஒவ்வொரு மாசமும் சரியான தேதிக்கு பீரியட்ஸ் ஆகுமாம். 

ஆனா, குமரெட்டியா புரம் வந்தால், சரியான இடை வெளியில் வர்ற தில்லைனு சொன்னது, நான் ஊருக்குத் திரும்பின பிறகும் உறுத்திக் கிட்டே இருந்துச்சு. 


அது தான், நூறாவது நாள் போராட்ட த்துக்கு என்னைப் போக வெச்சது'' என்கிற ரோசி மதுவின் கண்களில் அந்தக் காட்சி வருகிறது.

''அன்னிக்கு புதுத் தெருவில் தொடங்கிய பேரணி, அமைதியான முறையில் போயிட்டி ருந்துச்சு. 

ரெண்டு பக்கமும் நின்ன போலீஸ் காரங்க முகமே சரியில்ல. ஏதோ நடக்கப் போகும் விபரீதம் தெரிஞ்சது போல இருந்தாங்க. 

பெண் போலீஸ் முகங்களில் பதற்றம். ஆண் போலீஸார்களோ, 'போங்க... போங்க... 

உங்களுக்கு இருக்கு'னு சொல்ற மாதிரியே இருந்துச்சு. மகளையும் அழைச்சுட்டுப் போயிட்டிருக் கோமேனு சின்ன தயக்கம் மனசுக்குள்ளே ஓடுது. 

ஆனா, என் பக்கத்தில் வந்த அக்கா, ஒன்றரை வயது மகனைத் தூக்கிட்டு வந்திருந்தாங்க. 

பேரணியில பெண்கள் ஏராளமான பேர் இருந்தாங்க. 60 வயசுக்கும் மேலே உள்ளவங் களும் அதில் இருந்தாங்க. 

பேரணியை ரெண்டு மூணு இடங்கள்ல போலீஸ் நிறுத்தப் பார்த்தாங்க. மக்கள் உறுதியா இருந்ததால, தடுக்க முடியலை. 

கலெக்டர் ஆபீஸுக்கு போறதுக்கு முன்னாடி இருக்கிற பாலத்துக்கு அடியில் கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸ் காரங்க வீசியிருந்தாங்க. 

அந்த இடமே புகை மூட்டமா இருந்துச்சு. கர்சீஃப், ஷாலை வெச்சு முகத்தை மூடிக்கிட்டோம். 

ஒரு சிலரால மேற்கொண்டு வர முடியாம பின் தங்கிட்டாங்க. ஆனா, பலரும் அதைத் தாண்டிப் போக ஆரம்பிச்சோம்.

தூத்துக்குடி போராட்டம்

அப்போது தான் கல்வீச்சு நடந்துச்சு. முதலில் கல் எறிஞ்சது போலீஸ் காரங்க தான். அவங்க விட்டெறிஞ்ச கற்களைத் தான் மக்கள் எடுத்து திரும்ப வீசினாங்க. 

மக்களில் பலருக்கு மண்டை உடைஞ்சு ரத்தம் ஊத்துச்சு. தடியடியும் நடந்ததால கால் கைகளில் பயங்கர அடி வாங்கிட்டு மக்கள் ஓடினாங்க. 

புகையால் கண்கள் பயங்கரமா எரிய ஆரம்பிச்ச தால, கொஞ்சம் பேர் நின்னு போக ஆரம்பிச்சோம். 

அதுக்கு முன்னாடி போனவங்க கலெக்டர் ஆபீஸை நெருங் கிட்டாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே ஆபீஸுக்குள்ளே புகைஞ்சுட்டி ருந்துச்சு. 

கொஞ்ச நேரத்துல துப்பாக்கி யால் சுடும் சத்தம் கேட்டுச்சு. சுடப்பட்ட ஒருத்தரை மாற்றுத் திறனாளி வண்டியில் தள்ளிட்டு வந்தாங்க. 

என்ன நடக்குதுனே யாருக்கும் புரியலை'' என்கிற ரோசியின் கண்கள் கலங்குகின்றன. ''கலெக்டர் ஆபீஸுக்குப் போய் முற்றுகை பண்ணுவோம். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை அங்கேயே உட்கார்ந்துட லாம்னு தான் பலரும் நினைச்சி ருந்தாங்க. 

போலீஸ் காரங்க அதிக பட்சம் தடியடி நடத்து வாங்கன்னு தான் நினைச்சோம். மக்கள் யாரும் வன்முறை செய்ய நினைக்கலை. 

வன்முறை செய்ய கைக் குழந்தையைத் தூக்கிட்டு வருவாங்களா? குடும்பத்தோடு தான் வருவாங்களா? 

தற்காப்புக் காகத் தான் சுட்டோம்னு சொல்றது சுத்தப் பொய். திட்டமிட்டு செஞ்சதுதான் அது. 

ஒருத்தர் சுடப் பட்டதும் ஒரு டீம், ஆபீஸை நோக்கிப் போறதும், அவங்க சுடப் படுறதுமா இருந்துச்சு. 

ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி கோஷம் போட்டுட்டி ருந்தவங்க ரத்த வெள்ளத்தில் செத்து விழுந்ததைப் பார்த்து எப்படி எதிர் கொள்றதுனே தெரியலை. 

வெளியில் நின்ற மக்களுக்கு கோபமும் அழுகையுமா வந்துச்சு. 

எங்க உயிருக்கு கேடு தர்ற ஆலையை மூடுங்கன்னு சொல்றது அவ்வளவு பெரிய குத்தமான்னு தோணுச்சு. ஆனா அதை யார்கிட்ட கேட்க?

எல்லாமே சில நிமிடங்களில் நடந்துடுச்சு. அங்கே இருந்த வண்டியைக் கொளுத்தினதா சொல் றதெல்லாம் நம்பவே முடியாதது. 

சுடப்பட்ட வங்க, அடி பட்டவங் களை தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் இல்லை. 


சாதாரண மான சின்ன போராட்டம் னாலே ஆம்புலன்ஸை ரெடியா வெச்சிருப்பாங்க. 

இங்கே அதுவும் கிடையாது. டூ வீலர்ல தான் தூக்கிட்டுப் போனாங்க. 

அவங்களுக் கெல்லாம் தலையிலேருந்து ரத்தம் கொட்டுது. அப்படி அடிச்சிருக் காங்க. 

முதுகில் அடி வாங்கின வங்களுக்கு தோல் உறிஞ்ச மாதிரி ரத்தம் ஊத்துது. உயிர் வலியோடு டூவீலரை ஓட்டிப் போனாங்க. 

கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்கு அப்புறம் தான் ஆம்புலன்ஸ் வருது. 

என் மகள் மேலே அடி விழுந்துடு மோனு பயந்துட்டே பத்திரமா தூக்கி அனைச்சுக் கிட்டேன். 

குழந்தைகள் வெச்சிருக் கிறவங்க திரும்பிப் போகும்படி நண்பர்கள் சொன்னாங்க. 

அதனால் சிலரோடு நானும் திரும் பிட்டேன். ஆனா, அது இன்னும் கொடுமை யான அனுபவமா இருந்துச்சு. 

ஒரு பாலம்னா ஏறி இறங்கும் இல்லையா? ஏற்றத்தில் இருக்கும் போது, இறக்கத்தில் என்ன இருக்குன்னு தெரியாது. 

அந்த இடத்துல போலீஸ் காரங்க நின்னுக்கிட்டு திரும்பிப் போறவங் களையும் அடிச்சு நொறுக் குறாங்க.

தூத்துக்குடி

மகளோடு பத்திரமா போகணும்ங் கிறது மட்டும் தான் மனசுல இருந்துச்சு. போலீஸ் காரங்க கையில் மாட்டினா அவ்வளவு தான் என படபடப்பு. 

அந்த நிமிஷங் களை வாழ்க்கை யில் இனி மறக்கவே முடியாது. சாகிறது பற்றி எனக்குப் பயம் இல்லீங்க. 

என் பொண்ணுக் காக உயிரோடு இருக்க ணும்னு தோணுச்சு. அந்தப் பகுதியில் நிறைய குடிசைகள். 

அதன் பின்னாடி போய் போலீஸ் காரங்க பார்வையில் படாமல் ஒளிஞ்சுக் கிட்டோம். தண்ணீர் தாகம் எடுத்துச்சு. 

நாங்கள் ஓடி ஒளிஞ்ச இடங்க எல்லாமே முட்டுச் சந்துங்க. அங்கிருந்து தப்பிச்சு, 

மரக் கட்டைகள் அடுக்கி யிருந்த இடத்துக்கு வந்து ஒளிஞ்சு கிட்டோம். 

அதைப் பார்த்துட்ட போலீஸ், 'பொம்பளை களுக்கு இங்கே என்னடி வேலை? ஓடுங்கடி வீட்டுக்கு' னு சொல்லிக் கிட்டே அடிச்சாங்க. 

எங்களோடு வந்த நாலைஞ்சு பெண் களுக்குப் பெரிய அடி. போர் நடக்கும் நாட்டி லிருந்து தப்பிச்சு வர்ற அகதிகள் மாதிரி ஓடினோம். 

வெளியில் வந்த பிறகுதான் திரேஸ் புரத்தில் பெண்களை யும் சுட்டுக் கொன்னுட் டாங்கன்னு கேள்விப் பட்டேன்" என்று ஆயாசத்தை வெளிப் படுத்தித் தொடர்கிறார்.

"சென்னைக்கு வந்தும் அதே நினைவா இருக்கு. டாக்டர்கிட்ட போனேன். அந்தச் சம்பவங் களை மறக்க முயற்சி பண்ணுங் கன்னு சொன்னார். 

என் பொண்ணு, நிறையப் போராட்டங் களுக்கு என்னோடு வந்திருக்கி றாள். எப்பவும் பயந்ததில்லை. 

ஆனா இப்ப, ரொம்பவே பயந்துட்டா. பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்ட என் பொண்ணே இப்படி பயப்பட றான்னா, 

அங்கயே இருக்கும் சின்னப் புள்ளை களை நினைச்சா..." என்கிற ரோசி மது குரலில் வேதனை சுழல்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings