சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும் டி.எம்.எஸ்-லிருந்து சின்னமலை வரையி லுமான சுரங்கப் பாதை வழித்தடத்தில்
மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்க ளில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இது வரையில் 28 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்ன மலை – டிஎம்எஸ் வழித்தடத்தில்
பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது.
இந்நிலை யில் சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழா இன்று மதியம் 12.30 மணிக்கு எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்க வுள்ளது.
இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்று, மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப் பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதனை யடுத்து சின்ன மலை - டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரயில் போக்கு வரத்தும் இன்று தொடங்கு கிறது.
இதன் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்து க்கு பயணிகள் நேரடியாக சென்று வரலாம்.
அதே நேரத்தில் சைதாப் பேட்டை மார்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலைய த்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.
பின்பு, டி.எம்.எஸ். மார்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.
கட்டணம் விவரம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 0 - 2 கி.மீ தூரத்துக்கு ரூ.10, 2 - 4 கி.மீ ரூ.20, 4 - 6 கி.மீ ரூ.30, 6 - 10 கி.மீ ரூ.40,
10 - 15 கி.மீ ரூ.50, 15 - 20 கி.மீ ரூ.60, 20 - 50 கி.மீ ரூ.70 என ஏற்கெனவே கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
எனவே சென்ட்ரலில் இருந்து விமான நிலைய த்துக்கு கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப் படலாம் என்று கூறப் படுகிறது.
Thanks for Your Comments