ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என எழுத்து பூர்வமாக தெரிவிக்கா விட்டால் உடலை வாங்க மாட்டோம்.
துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணமான ஆட்சியர் மீதும் காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் பலியான உறவினர்கள் கொந்தளிப் புடன் கூறினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலைய வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடுவதற்காக பேரணியாகச் சென்ற போது
போலீஸாருக்கும் போராட்ட மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளில் மக்கள், போலீஸார் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு
ஆட்சியர் அலுவலகத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தி, 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை தீயிட்டுக் கொளுத்தினர்.
இதில் 110 வாகனங்கள் முற்றிலும் சேதமானது. வன் முறையைக் கட்டுப் படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி ஆகி உள்ளனர்.
தொடர்ந்து, நேற்று இரவில் வன் முறையைத் தூண்டியதாக 10க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ மனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரி ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம் என ஆவேசமாக கூறினர்.
மருத்துவமனை வளாகத்தில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மருத்துவ மனையைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலை யில் தூத்துக்குடி மாவட்ட த்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஓட்டப் பிடாரம் ஆகிய 3 தாலுகாக் களுக்கு உட்பட்ட பகுதிகளில்
இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ள தாக ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித் துள்ளார். துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
பேருந்துகள், ஆட்டோக்கள் ஓட வில்லை. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments