ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித் துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட த்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் இட மாற்றம் செய்யப் பட்டு, புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, `பதவி யேற்றுக் கொண்டார்.
பதவி யேற்றதும், தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப் பட்டவர்களு க்கு ஆறுதல் கூறிய அவர், 'மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுப்பது தான் முதல் பணி' என்று தெரிவித் திருந்தார்.
இந்த நிலையில், தூத்துக் குடியில் செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந் துள்ளனர்.
அவர்களில் 11 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். மொத்தம் 102 பேர் காய மடைந்துள்ளனர். இதில், 19 பேர் படுகாயங் களுடனும், 83 பேர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் துறையைச் சேர்ந்த 34 பேர் காய மடைந்துள்ளனர். போராட்ட த்தில் ஈடுபட்டு வந்த மக்களின் முக்கிய மான கோரிக்கையே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்.
தமிழக அரசின் முடிவும் அது தான். அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் ஆலைக் கான மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது.
மேலும், சுற்றுச் சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் அந்த ஆலைக்கு வழங்கப்பட வில்லை. இதனால், அந்த ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது
என்பது தான் தமிழக அரசின் முடிவு என முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் கூறி யிருந்தார்.
இதனால் பொதுமக்கள், அரசின் நடவடி க்கையை ஏற்று, அமைதி திரும்ப ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். நாளை முதல் வணிகர்கள் கடை களைத் திறக்க வேண்டும்.
மக்களின் வசதிக்காக அம்மா உணவகம் மற்றும் பண்ணை பசுமைக் கடைகளும் 24 மணி நேரம் செயல்படும்’’ என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments