பஞ்சாப் மாநிலத்தில் மாணவி களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய பேராசிரியரை,
கல்லூரி வளாகத்தில் வைத்தே மாணவிகள் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி யுள்ளன.
பஞ்சாப் மாநிலம் பாட்டியலா வில் உள்ள அரசு மகளிர் கல்லூரி ஒன்றில் பேராசிரிய ராக ஒருவர்,
தனது செல்போனில் இருந்து மாணவி களுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச எஸ்.எம்.எஸ் களை அனுப்பி யுள்ளார்.
பேராசிரிய ரின் அத்துமீறிய செயலால் வெகுண்டெழுந்த மாணவிகள், அவரை அடித்து உதைத்து,
சட்டை பிடித்து இழுத்து கல்லூரி முதல்வரின் அறைக்கு இழுத்துச் சென்றனர்.
அப்போது பேராசிரியரை கல்லூரி மாணவிகள் அடித்து உதைத்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி யுள்ளது.
மேலும் அவரை அடிக்கும் காட்சியை பிற மாணவிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த வீடியோ காட்சியை சமூக வலை தளத்தில் மாணவிகள் பதிவிட் டுள்ளனர்.
மாணவிகள் கல்லூரி பேராசிரியரை அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், மாணவி களிடம்
பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ அமைப்பினர் பல்வேறு போராட்டங் களை நடத்தியது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments