தவறான தேர்வு முடிவால் தகவலால் தீக்குளித்த மாணவர் !

0
பரமக் குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றும் தவறான தகவலால் தீக்குளித்த மாணவர் வியாழக் கிழமை உயிரிழந்தார்.
தவறான தேர்வு முடிவால் தகவலால் தீக்குளித்த மாணவர் !
பரமக்குடி காய்கறி மார்க்கெட் தெருவில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் கமிஷன் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்வரன் (15). 

பரமக் குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியானது. இந் நிலையில் அவர் 246 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

இந்நிலை யில் அவர் தோல்வி அடைந்து விட்டதாக அவரது நண்பர்கள் செல்லிடப் பேசி மூலம் தவறான தகவல் தெரிவித் துள்ளனர்.

இதனால் மனமுடைந்த விக்னேஷ்வரன் வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக் கிழமை விக்னேஷ்வரன் உயிரிழந்தார்.

இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings