நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற மாணவர்கள் | Students who went to Kerala to write the 'Yeat Test' !

இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக் கான நீட் தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெறு கிறது. 


தமிழகத் தில் நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடக்கிறது.

நெல்லை மாவட்ட த்தில் 10 பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர். 

இது போக தென் மாவட்டங் களில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பல மாணவ- மாணவி களுக்கு 

கேரள மாநிலம் எர்ணா குளம், கொச்சி, திருவனந்த புரம் பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

இதை யடுத்து ஏராளமான மாணவர் களுக்கு வெளி மாநிலங் களில் தேர்வு மையம் அமைக்கப் பட்டுள்ள தாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டது. 

இதையடுத்து வெளி மாநிலங் களில் தேர்வு மையம் ஒதுக்கப் பட்ட மாணவர் களுக்கு இங்கு தேர்வு நடத்த முடியுமா என ஆலோசனை நடத்தப் பட்டது.

இந்நிலை யில் சி.பி.எஸ்.சி. நிர்வாக த்தினர் மாணவர் களுக்கு ஒதுக்கப் பட்ட மையங் களில் மட்டுமே

தேர்வு எழுத வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் ஒப்புதல் வழங்கியது.

இதை யடுத்து நெல்லை மாவட்ட த்தில் இருந்து கேரளா மற்றும் பிற மாநிலங் களுக்கு எத்தனை மாணவர்கள் செல்கின்றனர் 

என கணக்கெடுக்கும் பணி கலெக்டர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் சேகரித்தனர். 

இதில் நெல்லை மாவட்ட த்தில் மட்டும் சுமார் 300 மாணவ- மாணவி களுக்கு கேரளாவில் மையம் ஒதுக்கப் பட்டது தெரிய வந்தது.


இந்நிலை யில் கேரளா செல்லும் மாணவர் களுக்கு பஸ் வசதி, தங்கும் வசதி போன்றவை 

அரசு சார்பில் செய்து கொடுக்க முடியுமா என்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப் பட்டது.

பாளை பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பின் இறுதி நாள் வகுப்பு நேற்று நடை பெற்றது. 

இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்த கொண்டனர். 

அப்போது தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்கள் மொத்த மாக செல்லலாமா என ஆலோசிக்கப் பட்டது. 

ஆனால் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் மையம் அமைக்கப் பட்டதால் 

மொத்த மாக செல்லும் திட்டம் கை விடப்பட்டு தனித் தனியாக செல்ல முடிவு செய்யப் பட்டது. 

மேலும் கடந்த ஆண்டு கேரளாவுக்கு சென்ற வர்கள் லாட்ஜ் களில் தங்க இடமில்லா ததால் சாலை யோரங்களில் தங்கி பொது கழிப்பிடங் களை பயன் படுத்தினர். 

எனவே இந்தாண்டு தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்துடன் 

மாணவர்கள் தங்கள் பெற்றோ ருடன் இன்றே வெளி மாநில தேர்வு மையங் களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதை யடுத்து திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் கோவில் பட்டியில் இருந்து 60 மாண வர்கள் புறப்பட்டனர். 

இதே போல் நெல்லையில் இருந்தும் பல மாணவர்கள் ரெயிலில் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டனர். 

இதனால் ரெயில் நிலைய த்தில் மாணவர்கள் கூட்டம் காணப் பட்டது.
Tags:
Privacy and cookie settings