தமிழக மாணவர்கள் ஓய்வெடுக்க மசூதியில் இடம்... நீட் தேர்வு !

திருவனந்த புரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணா குளம் பகுதியில் உள்ள இஸ்லாமி யர்கள் தங்களின் மசூதி களில் இடமளித் துள்ளனர்.
தமிழக மாணவர்கள் ஓய்வெடுக்க மசூதியில் இடம்... நீட் தேர்வு !
தமிழகத் தில் போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

5 சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லை யில் இருந்து தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணா குளத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலை யில் ஏற்கனவே கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணா குளம் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளில் இடமளித் துள்ளனர்.
இதே போல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல கட்டணம் வசூலிக்கப் படாது என கேரள சிஐடியு, சிபிஎம் ஆட்டோ தொழிற் சங்கங்கள் அறிவித் துள்ளன.
Tags:
Privacy and cookie settings