துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 100வது நாள் போராட்டத்தை ஒட்டி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக் காரர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள், அமைப்பினர் சார்பில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, உத்தர விட்டிருந்தது. இந்த சூழலில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments