இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், 1 இளம் பெண் உட்பட 11 பேர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் சம்பவம், அனைத்து தமிழ் மக்களின் மனதிலும் பேரிடியாக இறங்கி இருக்கிறது.
100 நாட்களாக அற வழியில் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள், இன்றும் ஆட்சியர் அலுவலக த்தை முற்றுகை யிட்டு, அறவழியில் தான் தங்கள் போராட்ட த்தை நடத்த திட்ட மிட்டிருந்தனர்.
ஆனால் 144 தடை உத்தரவால் போராட்டத்தின் பிம்பமே திசை மாறி கலவரமாக வெடித்தி ருக்கிறது.
ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராடியது, ஸ்டெர்லைட் வெளியிடும் நச்சு மூலம் பரவும் பல கொடிய நோய்களில் இருந்து, தங்கள் உயிரையும், தங்கள் வருங்கால சந்ததியையும், காப்பதற்காகத் தான்.
ஆனால் அந்த போராட்டமே இன்று அவர்களின் உயிரை பறித்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் தங்கள் வாழ் வுரிமையை நிலை நாட்ட போராடிய வர்களுக்கு நேர்ந்திருக்கும்,
இந்த அநியாயம் இன்று தமிழ் சமுதாயத்தையே கொந்தளித்து எழச் செய்திருக்கிறது.
இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளம் வாயிலாக தங்களது கோபமான கருத்துகளை பதிவேற்றி வரு கின்றனர்.
அதில், அதிகப் படியானோர், உலகமே வியக்கும் படி அற வழியில் போராட்ட த்தை நடத்திய எம் மக்கள், ஸ்டெர் லைட்டுக்கு எதிராக நடத்தியது வன்முறை போராட்டமா? இல்லவே இல்லை.
இறந்த 8 பேரும் நெஞ்சிலும் தலையிலுமே சுடப் பட்டிருக் கின்றனர். இவர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை போராட்டக் களத்தில் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
இவர்களை கொல்ல வேண்டும் என்பதற் காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது எனவும், இது அனைத்தும் அரசாங்க த்தின் சதியே என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் காவல் துறையே தீ வைத்து விட்டு தடியடி நடத்தினர். என்ன பாவம் செய்தனர் என் தமிழ் மக்கள்? என்றும் அதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Thanks for Your Comments