தூத்துக் குடியில் துப்பாக்கி ச்சூடு நடந்து இரண்டு நாள்கள் கடந்த நிலையில், இன்னும் பதற்ற மான சூழல் மாற வில்லை.
துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் அந்த மக்களின் செவிகளை விட்டு அகல இன்னும் சில காலமாகும்.
தூத்துக்குடி மக்களுக்கு தன் வாழ் நாளில் இது போன்ற ஒரு சோதனைக் காலம் இனி வரவே கூடாது.
இன்று 144 தடை உத்தரவு போடப் பட்டிருக்கும் நிலையில், மக்கள் மிகவும் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.
'கமாண்டோ படைகள் இறக்கப் பட்டுள்ளன, தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது' எனப் பல்வேறு செய்திகள் வருகின்றன.
அதன் உண்மைத் தன்மை குறித்தும், தற்போதைய கள நிலவரம் குறித்தும் போராட்டக் களத்தில்
உள்ள விகடன் நிருபர்கள் தமிழ்ப்பிரபா, கலைச் செல்வன் ஆகியோர் அளித்த தகவல்கள்...
"துப்பாக்கிச் சூடு நடந்த தூத்துக் குடியில், நேரடி ஒளி பரப்புக்குத் தேவை யான செய்தி சேனல் களின் OB வாகனங்கள் இரண்டு நாள்களாக அனுமதிக்கப் படவில்லை.
இன்று தான் இந்த வாகனங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. 100 நாள் களாகப் போராடும் மக்கள் பலரும், வேலை களுக்குச் செல்லாமல் போராடி வரு கின்றனர்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள தால், மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடை களுமே திறக்கப் படவில்லை.
இதனால் அந்தப் பகுதி மக்கள் பலரும் உணவுக்கு என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடை பெற்ற அன்று கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர், என்ன ஆனார்கள்...
எங்கு இருக்கிறார்கள் என்பது அவர்களின் உறவினர் களுக்குத் தெரியப் படுத்த வில்லை. இன்று 65 பேரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித் திருக்கிறது.
அடிபட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரு பவர்களுக்கு மருந்துகள் உள்ளிட்டவை முறை யாகக் கிடை க்கின்றன.
தூத்துக்குடி, அண்ணா நகர் பகுதியில் கமாண்டோ படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் உடல்களைப் பதப்படுத்து வதற்காக பாளையங் கோட்டைக்கு எடுத்துச் சென்று ள்ளார்கள்.
தூத்துக்குடி அரசுப் பொது மருத்துவ மனையில் இடப்பற்றாக் குறை காரண மாகவே பாளையங் கோட்டைக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித் துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த உயிரி ழந்தவரின் உறவினர்கள், '12 பேரின் உடல் களைப் பதப்படுத்த இட மில்லை எனச் சொல்வதை நம்ப முடிய வில்லை' என்றனர்.
நிருபர்கள் இருவரும், சகாயபுரம் பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசியிருக் கிறார்கள்.
அவர்கள் அதிர்ச்சி யளிக்க க்கூடிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது குண்டடி பட்டு விழுந்து கிடந்த வர்களை, அங்கு இருந்த பொது மக்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தடியடி அதிகரிக்கவே தூக்கிச் சுமந்தவர் களை அருகில் இருந்த இடங்களில் இறக்கி விட்டு அவர்கள் தப்பி ஓடி யுள்ளனர்.
இப்படி பல குழப்பங்களும் பதற்றங் களும் நிறைந்தே இருக்கிறது தற்போதைய தூத்துக்குடி நகரம்.
"பத்திரிகை நிருபரா?'' எனக் கேட்டு தனியாக அழைத்துப் பேசி யுள்ளார்,
போராட்ட த்தைக் கட்டுக்குக் கொண்டு வர அனுப்பட்ட காவலர் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாத அந்தக் காவலர் உருக்கமாகச் சிலவற்றைப் பகிர்ந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்தது நிறைய போலீஸுகே அதிர்ச்சியாத் தான் இருக்கு. இப்படி நடக்கும்னு எங்களுக்கே தெரியாது.
இவ்வளவு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானது ரொம்ப மோசமான ஒரு நிகழ்வு தான்" என்று பதை பதைப்புடன் கூறி யுள்ளார்.
இவ்வளவு துயரங்களைத் தாங்கிவரும் தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் களின் கருத்து.
Thanks for Your Comments