தூத்துக்குடி படுகொலைகளின் எண்ணிக்கை !

0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி யுள்ளது.
தூத்துக்குடி படுகொலைகளின் எண்ணிக்கை !
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட முயன்ற பொது மக்கள் மீது காவல் துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல் துறையினரின் இந்த சட்ட விரோதப் போக்கைக் கண்டித்தும், இந்த கொடூர சம்பவத்திற்கு உத்தர விட்ட அதிகாரிகளை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வர வில்லை என்ற அதிர்ச்சி கரமான தகவல் தற்போது வெளியாகி யுள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் போராட்ட த்தில் பங்கேற்று துப்பாக்கிச் சூட்டிலிருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய ஒருவர் கூறியதாவது: குறி வைத்து சுடப்பட்ட எண்ணிக்கை மட்டுமே அரசாங்கத்தால் சொல்லப்பட்டு வருகிறது.

கண் மூடித் தனமாக சுடப்பட்டு கீழே சரிந்து விழுந்தப் பத்துக்கும் மேற் பட்டவர்களை அப்போதே உடனுக்குடன் பாளையங் கோட்டை சரகச் சீருடைப் படையினர் வாகனத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டுச் சென்றனர். 
அவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது பெயர்கள் அரசாங்கப் பட்டியிலில் இடம் பெற வில்லை.

அதேநேரம் நேற்று சொந்த ஜாமீனில் விடுவிக்கப் பட்ட 65 பேர் அல்லாமல் நேற்று முன்தினம் அண்ணா நகரில் கைது செய்யப் பட்ட 67க்கும் மேற்பட்டோர் இன்று வரை அழைக்களிக் கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டுள்ளனர். 

அதில் 68 பேருக்கு தற்போது பிணை வழங்கப் பட்டுள்ளது. இன்னும் பலப் பள்ளிக் குழந்தைகள் தங்களது 10ம் வகுப்பு ரிசல்ட் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். 

செய்திகளில் வருவது போல் இயல்பு நிலை என்பது இயல்பாக வெல்லாம் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கோபிநாதன் என்பவரது புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 
ஆனால் அவரது பெயர் அரசு வெளியிட்ட செய்தியில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந் துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டிலிருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பியவர் கூறிய வாக்கு மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings