தூத்துக்குடியில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன !

0
தூத்துக்குடியில் அமைதி நிலைநாட்டும் விதமாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன !
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,. மக்கள் பிரதி நிதியாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், 

வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி தொழில் வா்த்தக சபை நிர்வாகிகள், பாதிரியர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றனர்.

இதை யடுத்து தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்து களை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கி யுள்ளன. 

நகரில் ஆங்காங்கே மருத்துக் கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப் பட்டுள்ள நிலையில், மற்ற கடைகள் திறக்கப்பட வில்லை என தகவல்கள் தெரிவிக் கின்றன.
தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு எதிரே உள்ள அம்மா உணவகம் மீண்டும் திறக்கப் பட்டது. 

மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோருக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே அறிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings