நெல்லையில் பேட்டியளித்தவர் தூத்துக்குடியில் கைது... ஸ்டெர்லைட் !

0
தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 
நெல்லையில் பேட்டியளித்தவர் தூத்துக்குடியில் கைது... ஸ்டெர்லைட் !
போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் பல அமைப்பினர் வரிசையாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி போராட்ட த்துக்கு ஆதரவாகப் போராடு பவரும் பாதிக்கப் பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கச் சென்ற 

வருமான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் உட்பட 10 பேர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டனர். 

அதை யடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட த்துக்கு ஆதரவாகப் போராடி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணியள வில் தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உத்திரம் போலீஸால் பிடித்துச் செல்லப்பட்டார். 

ஆழ்வார் திருநகரி போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாக மணத்தி மக்கள் தெரிவித்தனர். 

மூத்த குடிமகனான அவர், உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ மனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் போலீஸால் பிடித்துச் செல்லப் பட்டுள்ளார்.

அந்த போலீஸ் நிலையத்துக்கு நாம் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டதற்கு, ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி விசாரிப்பதற் காகவே உத்திரத்தை எஸ்.ஐ. சிவலிங்கம் கூட்டி வந்தார். 
மேலிருந்து சொல்லியிருக் கிறார்கள். கைது செய்யப் பட்டதாக இன்னும் பதிய வில்லை. மாலையில் விட்டு விடுவதாகத் தான் தகவல் என்று காவல் பணியிலிருந்த அதிகாரி தெரிவித்தார். 

போலீஸின் பிடியிலுள்ள உத்திரம், நேற்று நெல்லையில் தூத்துக்குடி போராட்டம் பற்றி செய்தியாளர் களுக்குப் பேட்டியளித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings