தூத்துக்குடியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பனின் சடலத்துடன் பேசி போலீஸார் நடந்த கொண்ட விதத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
தூத்துக் குடியில் நேற்று நடந்த போராட்ட த்தின் சுவடுகள் மறைவ தற்குள் இன்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடை பெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிர வைத்துள்ளது.
நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான வர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்க,
அவர்களைக் கலைக்க மருத்துவ மனை இருக்கும் பகுதி என்று கூட பாராமல் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப் பட்டுள்ளது. இதில் காளியப்பன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து பலியாகி யுள்ளார்.
இதற்கிடையே, காளியப்பனை சுட்டுக் கொன்ற பிறகு, போலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்து நியூஸ்மினிட் செய்தியாளர் அனா ஐசக் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோ வெளியாகி யுள்ளது.
அதில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டால் காளியப்பன் கீழே சரிந்து இறந்து கிடக்க அவரைச் சுற்றி 10 முதல் 15 போலீஸார் இருந்தனர்.
அப்போது சிலர் அவன் 'நடிக்கிறான், நடிக்கிறான்' என்று கூற ஒருவர் அதற்கும் ஒருபடி மேலே போய் தான் வைத்திருந்த லத்திக் கம்பால் காளியப்பனைத் தொட்டு, `ஏய் ரொம்ப நடிக்காதே போ' என்று கூறுகிறார்.
போலீஸாரின் மனசாட்சி யற்ற இந்தச் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
One cop prods the man lying on the ground and says, “stop acting, leave”. #SteriliteProtest pic.twitter.com/rcp6vWcsu7— Anna Isaac (@anna_isaac) May 23, 2018
ஏற்கெனவே, நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 11 பேர் பலியாகி யுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகி யிருப்பது தூத்துக் குடியில் மேலும் பதற்றத்தை அதிகரித் துள்ளது.
Thanks for Your Comments