மணல் கடத்தலைத் தடுத்த காவலாளி கொலை... மாஃபியாவைப் பிடித்த மோப்ப நாய் !

0
மணல் கடத்தலை காட்டிக் கொடுத்ததாக, காவலாளி ஒருவர் கொடூர மாகக் கொலை செய்யப் பட்டு பாலாற்றில் புதைக்கப் பட்ட சம்பவம் செங்கல் பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மணல் கடத்தலைத் தடுத்த காவலாளி கொலை... மாஃபியாவைப் பிடித்த மோப்ப நாய் !
காஞ்சி புரத்தில் உள்ள பாலாற்றில் மணல் அள்ளு வதற்கு, சென்னை உயர் நீதி மன்றம் கடந்த 2012-ம் ஆண்டு தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இந்த நிலையில், மணல் கடத்தல் மாஃபியாக்கள் பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்து வருகிறார்கள்.

செங்கல் பட்டு அருகே உள்ள வில்லியம் பாக்கம் பகுதியில், இரவு நேரங்களில் காவல் துறையின ரின் உதவியோடு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

வில்லியம் பாக்கம் பாலாற்றங் கரை ஓரத்தில் இருக்கும் கொய்யாத் தோப்பு ஒன்றில், மனோகர் என்பவர் காவலாளி யாகப் பணிபுரிந்து வந்தார்.

அங்கேயே கொட்டகை அமைத்து, இரவு நேரங்களில் தங்கி யிருந்தார். மணல் கடத்தல் லாரிகள் கொய்யாத் தோப்பு வழியாக பாலாற்றுக்குச் செல்வதை இவர் அனுமதிக்க வில்லை.

இதனால், உள்ளூர் மணல் கொலை செய்யப் பட்ட காவலாளி மனோகர் கடத்தல் காரர்களு க்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங் களுக்கு முன்பு மனோகர் கொலை செய்யப் பட்டு, அந்த கொய்யாத் தோப்பிலேயே புதைக்கப் பட்டார்.
கடந்த சில தினங் களாக மனோகரைக் காண வில்லை என்பதால், அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த கொய்யாத் தோப்பு பகுதியில் அவரைத் தேடினார்கள்.

அங்கே, அவரது பல் செட்டும் ரத்தக் கரையும் இருக்கவே, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாலூர் காவல் நிலையத்தி லிருந்து வந்த காவலர்கள், நேற்றிரவு அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 

ஒரு வழியாக, மனோகர் புதைக்கப் பட்ட இடத்தைக் காவல் துறையினர் கண்டு பிடித்தனர். மனோகரின் உடல், பிரேதப் பரிசோதனைக் காக செங்கல் பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

கொலை செய்வதற்குப் பயன் படுத்தப் பட்ட ரத்தக் கரை படிந்த இரும்புக் கம்பி ஒன்று அங்கே கிடந்தது.

இதை யடுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், காவல் துறையினர் கொலை யாளியைத் தீவிரமாகத் தேடும் முயற்சியில் ஈடு பட்டனர்.

அஜய் என்ற மோப்ப நாய் வர வழைக்கப் பட்டது. காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள், நீண்ட தூரம் ஓடி கண்டு பிடிக்க முடியாமல் நின்று விடும்.
ஆனால், கொலை நடந்த இடத்தி லிருந்து அஜய் வேகமாக ஓடி, ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள தேவனூர் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரின் வீட்டின் முன்பு படுத்துக் கொண்டது.

காவல் துறையினர் ஏற்கெனவே சந்தேகப் பட்டதும் பாலாஜியைத் தான். காரணம், அவர்மீது மணல் கடத்தல் தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன.

மூன்று முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் பாலாஜி. இதனால், பாலாஜியைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings