தமிழக அரசுக்கு என்ன அக்கறை? கேட்ட உயர் நீதிமன்றம் !

0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.
தமிழக அரசுக்கு என்ன அக்கறை? கேட்ட உயர் நீதிமன்றம் !
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந் தவர்களின் உறவினர்கள், உடல் களைக் கேட்பதாக வும், அது குறித்த கடிதத்தையும் தமிழக அரசு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.

அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வர்களின் உறவினர்கள், உடல்களைக் கேட்டு அளித்த கடிதங்கள், மிரட்டி வாங்கப் பட்டதாக மனுதாரரின் வழக்குரைஞர் கூறியதை அடுத்து, கடிதம் குறித்து மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தர விட்டது.

அதே சமயம், தமிழக அரசின் முறையீட்டை ஏற்க மறுத்த நீதிமன்றம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ம் தேதி தர உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இதுவரை 2 பேரின் உடல்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்தது.
மேல் முறையீடு குறித்துக் கருத்துக் கூறிய நீதிபதி, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வர்களின் உடல் களை உறவினர்களே கேட்காத நிலையில் 

தமிழக அரசுக்கு என்ன அக்கறை என்று கேள்வி எழுப்பியதோடு, உறவினர் களிடம் உடல்களை ஒப்படைக்க உத்தர விடக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings