தமிழகத்தில் இப்போது அதிகமாக உச்சரிக்கப் படும் வார்த்தை `பேன் ஸ்டெர்லைட்' (Ban Sterlite). ஆனால், இரு தினங்களுக்கு முன்பு வரை அதை உரத்த குரலில், உளமறியச் சொல்லிக் கொண்டிருந் தவர்கள் நிலை இந்தியாவையே பதற வைத்திருக் கிறது.
காவல் துறையினர் அவர்கள் மேல் நவீன துப்பாக்கி கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 13 பேர் பலி... படுகாயங் களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஏராளமான அப்பாவிகள்...
இயல்பு வாழ்வைப் பறி கொடுத்து விட்ட தூத்துக்குடி மக்கள்... கடையடைப்பு தொடங்கி தமிழக மெங்கும் பற்றிக் கொண்டிருக்கும் போராட்டங்கள்..!
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந் தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கு களைக் கூட நடத்த முடியாத நிலை..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்
“உயிரிழந்த வர்களின் உடலை வாங்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பங்கள் கதறுகின்றன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டம் அமைதியாகத் தான் தொடங்கியது. வழக்கமாக போராட்டங்கள் தொடங்கி, அன்றே முடிந்து விடும்.
ஆனால், அன்றைய போராட்டம் போர்க் களமானது. 11 பேரின் உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன. ஏராளமானோர் படுகாயங் களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக் கிறார்கள்.
நேற்று, மருத்துவ மனை முன் நடந்த போராட்டத்தில் மேலும் ஒருவர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். மருத்துவ மனையிலிருந்த மேலும் ஒருவரும் இறந்தி ருக்கிறார்.
தூத்துக்குடி மரணங் களுக்கு நியாயம் கேட்டு, மறியல், முற்றுகை, கண்டனம் என எதிர்ப்பு அலை வலுவாகிக் கொண்டே யிருக்கிறது. இன்னொரு பக்கம் அரசு தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லி வருகிறது.
எழில் உடற்கூறியல் துறைத் தலைவர் இந்த நிலையில் தான் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் உயிரிழந் தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்யும் பணி நேற்று (23-05-2018) தொடங்கியது.
பத்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், நான்கு பேர் கொண்ட நீதித்துறை நடுவர்கள் முன்னிலை யில், பிரேத பரிசோதனையைத் தொடங் கினார்கள்.
பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப் பட்டது. இரண்டு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், `மத்தியக் குழுவினர் முன்னிலை யில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
அதுவரை உடலைப் பதப்படுத்தி வைக்க வேண்டும்’’ என அதிரடியாக, சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித் திருக்கிறது.
இதன் காரணமாக, போஸ்ட் மார்ட்டம் செய்வது நிறுத்தி வைக்கப் பட்டது. `இறந்தவரின் உடலை ஏன் பதப்படுத்த வேண்டும்... எப்படிப் பதப்படுத்து கிறார்கள்...
அதை எத்தனை நாள் களுக்கு வைத்திருக்க முடியும்?’ தேனி அரசு பொது மருத்துமனை உடற்கூறியல் துறைத் தலைவர் எழில் விளக்குகிறார்...
இட்லியில் இத்தனை சத்துக்களா?
``உடலைப் பதப்படுத்த எம்பாமிங் (Embalming) முறையைப் பயன்படுத்து கிறோம். ஒருவர் இறந்ததும் உடலிலுள்ள ரத்தம் உறைந்து போகும்.
அதை வெளியேற்றி விட்டு, ரத்த நாளங்கள் வழியாக சில வேதிப் பொருள்களைச் செலுத்துவோம். இறந்த உடலின் ரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படும் ரசாயனக் கலவையே `எம்பாமிங் திரவம்’ என அழைக்கப் படுகிறது.
எம்பாமிங் - உடலைப் பதப்படுத்துதல்
உடலில் ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கும். அது முழுவதை யும் வெளியேற்று வோம். பிறகு, ஃபார்மலின் (Formalin) ரசாயனக் கலவை ஒரு லிட்டரையும்,
ஆல்கஹால் (Alcohol), கிளிசரால் (Glycerol), தைமால் உப்புகள் (Thymol crystals), சோடியம் குளோரைடு ஆகிய வற்றையும் எடுத்து, நான்கு லிட்டர் வடி நீருடன் (Distilled water) சேர்த்து எடுத்துக் கொள்வோம்.
இதை ரத்தம் வெளியேற்றப் பட்ட சடலத்து க்குள் செலுத்துவோம். இது தான் உடலை அழுகாமல் பாதுகாக்கும். உயிரிழந் தோரின் உடலை ஓரிரு நாள்கள் மட்டுமே குளிர் பதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க லாம்.
நீண்ட நாள்கள் வைத்திருக்க வேண்டு மென்றால், ஃபார்மலின் திரவத் தொட்டியில் வைத்து பாதுகாக்க முடியும். இப்படிச் செய்யும் பிரேதத்தில் சில மாறுதல்கள் வரும். முகம் கறுப்பாவது, உடலில் சுருக்கம் போன்றவை ஏற்படும்.
எம்பாமிங் திரவத்தை சரியான அளவில் கலக்கினால், இப்படி ஏற்படுவதைக் கூடுமான வரை தடுத்து விடலாம்.
மற்றபடி உடல் உறுப்புக ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தேவையான சமயத்தில் பிரேதத்தை எடுத்து, ஆய்வு செய்யலாம்.
விபத்து, போராட்டம், கொலை செய்யப் படுதல் போன்ற வற்றின் காரண மாக உயிரிழந் தோரின் உடலைப் பதப்படுத்த வேண்டு மென்றால், அவர்களைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
போஸ்ட் மார்ட்டம் செய்து விட்டால் ஒரு ரத்தக் குழாய் வழியாக எம்பாமிங் திரவத்தைச் செலுத்த முடியாது. எனவே, ஆங்காங்கே இருக்கிற ரத்தக் குழாய்கள் மூலமாகச் செலுத்தி விட்டால் உடல் அழுகாம லிருக்கும்” என்கிறார் எழில்.
தூத்துக் குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் இரண்டு பேரின் உடல்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப் பட்டிருக் கின்றன.
அந்த உடல்கள் மருத்துவ மனையிலேயே இருக்கின்றன. `உறவினர்கள் உடலை கேட்பதாக’க் கூறி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை, நிராகரித் திருக்கிறது உயர் நீதி மன்றம்.
Tags:
Thanks for Your Comments