மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்த தாகக் கூறி விட்டு பெண் குழந்தையை
மாற்றிக் கொடுத்த தாகப் புகார் எழுந்துள்ள தால் மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
மதுரை அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் திருடப்படும் சம்பவங்கள் சில ஆண்டு களுக்கு முன் தொடர்ச்சி யாக நடந்தன. அதில் ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
அதற்குப் பின் மருத்துவ மனையில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு, பல இடங்களில் கண் காணிப்பில் ஈடுபட் டுள்ளது.
இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த மாதம் 25ம் தேதி பள்ளப் பட்டியைச் சேர்ந்த ராணி என்ற பெண் பிரசவத்துக் காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அன்று மாலையே அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. முதலில் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தாகக்
கூறிய செவிலியர்கள், சிறிது நேரத்தில், பெண் குழந்தையைத் தாயின் கையில் கொடுத்த தாகக் கூறப்படு கிறது.
அதிர்ச்சி யடைந்த ராணி, தனது உண்மை யான குழந்தை எங்கே என்று கேட்டதற்கு செவிலியர்கள் சரியான பதிலைக் கூற வில்லை.
இதற்கிடையே அவரை டிஸ்சார்ஜ் செய்து வெளியே அனுப்ப முயற்சி செய்த நிலையில் கடந்த 9 நாள்களாக மருத்துவ மனைக்கு உள்ளேயே அமர்ந்து போராட்டம் செய்து வந்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே செல்லாத வகையில் பல்வேறு விதங்களில் மருத்துவ மனையில் சிலர் அவரை மிரட்டி வந்ததாகக் கூறப்படு கிறது.
இருப்பினும் தனது உண்மை யான குழந்தை எதுவென்று தெரியாமல் மருத்துவ மனையை விட்டுச் செல்ல மாட்டேன் என ராணி போராட்ட த்தில் ஈடுபட் டுள்ளார்.
தற்போது இந்த விவகார த்தை மருத்துவ மனை நிர்வாகம் விசாரித்து வருகிறது.