ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக் குடியில் நடந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், 10-ம் வகுப்பு மாணவி வெனிஸ்டா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களும் பிரபலங்களும் தமிழக அரசு மற்றும் காவல் துறைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தவிர்க்க முடியாத சூழலில் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
இந்தநிலை யில் சென்னை ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,
`அமைதி யான முறையில் போராடிக் கொண்டி ருந்தவர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் கண்டிக்கத் தக்கது.
சட்ட திட்டங்களுக்கு உட்படாமல், உரிமம்கூட இல்லாமல் அந்தப் பகுதியை மாசு படுத்திக் கொண்டி ருக்கும் அந்த ஆலை களுக்கு ஆதரவாகச் சட்டத்தை ஏவுவது என்பது பொறுக்க முடியாத ஒன்று.
வணிக வெற்றிக்காக மனித உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கண்டிக்கத் தக்கது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பல்வேறு வயதுடைய 10 பேர் இறந்துள் ளார்கள் என்பது தான் எனக்கு வந்த செய்தி. அதில், வெனிஸ்டா என்ற பள்ளி மாணவியும் அடக்கம்.
அவர், தனது தேர்வு முடிவுக் காகக் காத்துக் கொண்டிருந்தவர். இந்தச் சோகத்தை, துரோகத்தைத் தமிழகம் மறக்காது.
வன்முறை ஏற்பட்டது என்ற ஒரு காரணத்தைக் கூறி, நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்ற ஒரு காரணத்தைச் சொல்லப் போகிறார்கள்.
என்னுடைய கேள்வி யெல்லாம் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம் என ஆணை பிறப்பித்தவர் யார்? அதைத் துப்பாக்கிச் சூடு வரை கொண்டு போகலாம் என அனுமதி அளித்தது யார்?
இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல; தமிழகத்தின் கேள்வி. இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராவது ஓர் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது.
மேலிடத்தி லிருந்து ஓர் உத்தரவு வராமல் இந்தச் சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது போன்ற அரச வன்முறையை மக்கள் நீதி மய்யம் வன்மை யாகக் கண்டிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது தான் இன்றைய நிலை’’ என்றார்.
Thanks for Your Comments