உலகின் வயதான சிலந்தி மறைவு... சோகத்தில் ஆர்வலர்கள் !

உலகின் வயதான சிலந்தி என்று அறியப்பட்ட 'நம்பர் - 16' சிலந்தி ஆஸ்திரேலியா ஆய்வக த்தில் மரணம் அடைந் ததாக ஆய்வா ளர்கள் தெரிவித்தனர். 
உலகின் வயதான சிலந்தி மறைவு... சோகத்தில் ஆர்வலர்கள் !
மேற்கு ஆஸ்திரேலியா வின், மத்திய வீட் பெல்ட் பகுதியில் 1974-ம் ஆண்டு, மிகப் பெரிய சிலந்தி பூச்சி ஒன்றை ஆய்வா ளர்கள் கண்டு பிடித்தனர். 

இந்தச் சிலந்திக்கு 'நம்பர் 16' என விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். இதை ஆய்வகத்துக்குக் கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். 

முதற்கட்ட ஆய்வில், இது வைல்டு டிராப்டோர் வகையைச் சேர்ந்த சிலந்தி என்பது கண்டு பிடிக்கப் பட்டது. பொதுவாக, வைல்டு டிராப்டோர் வகை சிலந்திப் பூச்சிகள் அடர்ந்த காடுகளில் வளரக் கூடியவை.

இருப்பினும், ஆஸ்திரேலியா வில் உள்ள பூங்காக்க ளிலும் வளர்ந்த மரங்க ளிலும் பரவ லாகக் காண முடிந்தது. 

எனவே, டிராப்டோர் வகை சிலந்திகளின் குணநலன்களை ஆய்வு செய்வதற்காக நம்பர் - 16 பயன் படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் பூச்சி ஆராய்ச்சி யாளர்களுக்குப் பெரிதும் பயன் அளித்தது. 
இந்நிலை யில், தன்னுடைய 43வது வயதில் டிராப்டோர் வகை சிலந்தி மரணம் அடைந்த தாக ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.

இது குறித்துப் பேசிய ஆஸ்திரேலியா வின் கர்டின் பல்கலைக் கழகப் பூச்சியல் துறை ஆய்வாளர் ஒருவர், வழக்க மாக டிராப்டோர் வகை சிலந்திகள் 5 முதல் 20 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். 

ஆனால், நம்பர் - 16ஐ ஆய்வக த்தில் வைத்துப் பராமரித்து வளர்த்த தால் 43 வயது வரை வாழ்ந் திருக்கிறது. 
ஆராய்ச்சிக் காகப் பதிவுசெய்யப் பட்ட சிலந்திப் பூச்சிகளில் மெக்சிகோ நாட்டின் டிரான்டுலா என்னும் சிலந்தி தான் நீண்ட நாள் உயிர் வாழ்ந்த தாகக் கருதப் பட்டது. 

அந்தச் சாதனையை நம்பர் - 16 முறியடித்து, உலகின் மிகவும் வயதான சிலந்தி என்ற பெயரைப் பெற்றது' என நெகிழ்ந்தார்.
Tags:
Privacy and cookie settings