பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார்.
அவரை இந்தியா விடம் ஒப்படைக்க உத்தர விடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந் துள்ளது.
மேலும், விஜய் மல்லையா வின் உலகளாவிய சொத்துகளை முடக்கு வதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித் துள்ளது.
கர்நாடகா வில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லை யாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கி களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவு க்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா முறை யிட்டார்.
ஆனால், கடந்த மாதம் 8-ந் தேதி, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டார். விஜய் மல்லையா விடம் கடனை வசூலிக்க இந்திய வங்கி களுக்கு அனுமதி அளித்தார்.
இந்நிலை யில், இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாய த்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய
இந்திய வங்கி களுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நேற்று உத்தர விட்டார்.
இதற்கிடையே, விஜய் மல்லை யாவை இந்தியா விடம் ஒப்படைக்கக் கோரும் வழக்கின் இறுதி விசாரணைக் காக, அவர் அடுத்த மாதம் 31-ந் தேதி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகிறார்.
Thanks for Your Comments