மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூறப் படுகிறது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சமூக சீர்திருத்த வாதி அன்னி பெசண்ட் அம்மை யாருக்கு போஸ்ட் கார்டு வடிவில் கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.
அந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார்.
நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படு கிறான்.
அவரது செலவுகள் பற்றி கவலைப் பட வேண்டாம் . அவன் உங்கள் விருந்தாளி யாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் காந்தி எழுதி கையொப்ப மிட்டிருந்தார்.
இக்கடிதத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது. ஏலம் கடந்த 13-ம் தேதி யுடன் நிறை வடைந்தது.
இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார் .
Thanks for Your Comments