மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19,000 பேர் !

0
மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19,000 பேர் !
மலேசியா வில் சட்ட விரோதமாக தங்கி யிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதை அதிகாரப் பூர்வமாக உறுதிப் படுத்தியுள்ள மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், 

சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந் தவர்கள் என பலர் கைதாகி யுள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.

இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதி களிலிருந்து கைது செய்யப் பட்டதாக வும் தெரிவித் திருக்கிறார்.

அத்துடன், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் விசா பெற்று, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி 

முறையான விசாவில் வேலை செய்தாலும் முந்தைய நிறுவனம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் குடிவரவுத் துறை நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தி ருக்கிறார்.
கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர் களை முறைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச் செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இந்நடவடிக் கையின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்து வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல் காரர்கள் வழியாக அப்பகுதிகளி லிருந்து ஆட்களை அழைத்து வரு கின்றனர்.

இவர்கள் கட்டு மானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். 

லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்து பவர்கள் இவர்களை எந்தவித ஆவணங் களுமின்றி பணியில் வைத்துள்ளனர்.
இறுதியில் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும் பாலான தொழி லாளர்கள் துரத்தப்படும் அவலங் களும் நிகழ்கின்றன.

ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணி களுக்கு இடை யிலான ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings