இளைஞரின் நுரையீரலில் குத்திய இரண்டு அடி கம்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் வெற்றி கரமாக அகற்றப் பட்டது.
சென்னை நுங்கம் பாக்கத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (29). கார் ஓட்டுநரான இவர் மே 20-ஆம் தேதி
தனது வீட்டு சுவற்றில் ஏறிக் குதிக்கும் போது கால் தடுமாறி அருகில் இருந்த இரும்பு கதவின் மேல் விழுந்தார்.
அப்போது கதவில் இருந்த கூர்மை யான 2 அடி நீள கம்பி அவர் முதுகு பகுதியில் குத்தியது.
இதனை யடுத்து அங்கிருந்த பொது மக்கள் போலீஸா ருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் காயத்தின் தன்மையை உணர்ந்து தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் "ஹைட்ராலிக் கட்டர்' எனும் கருவியைக் கொண்டு கதவில் இருந்து கம்பியை அறுத்து எடுத்தனர்.
ஆனால் உடம்பில் குத்தி யிருந்த கம்பியை அகற்றாமல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அவரை அனுமதித்தினர்.
மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்து கம்பி அகற்றப் பட்டது. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி,
இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சிவராம் ஆகியோர் செய்தி யாளர்களிடம் வியாழக் கிழமை கூறியது:
உடலில் குத்தியிருந்த கம்பியானது நுரையீரலைத் துளைத் திருந்தது.
சம்பவ இடத்தில் கம்பியை வெளியே எடுத்திருந்தால் ரத்தம் வீணாகி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டி ருக்கும்.
தீயணைப்புத் துறையினர் கதவில் இருந்து கம்பியை மட்டும் அறுத்து, கம்பி குத்தியிருந்த நிலை மாறாமல் அப்படியே மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தனர்.
இதன் காரண மாகவே அறுவைச் சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுத்து நோயாளியைக் காப்பாற்ற முடிந்தது. நுரையீரலில் ஏற்பட்ட காயமும் சரி செய்யப் பட்டுள்ளது.
எந்த ஒரு கூர்மையான ஆயுதம் உடலில் குத்தினாலும் அதை வெளியே எடுக்காமல்
மருத்துவ மனைக்கு கொண்டு வந்தால் நோயாளியைக் காப்பாற்றுவது எளிது என்று தெரிவித்தனர்.
Thanks for Your Comments