நரம்புச் சுருட்டு (வெரிகோஸ் வெயின்) நோய் இருந்தால் ராணுவம், துணை ராணுவம் ஆகிய ஆயுதப் படைகளில் சேர முடியாது என்று தில்லி உயா் நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
நரம்புச் சுருட்டு நோய் இருந்து அதனை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்து கொண்ட வா்களும் ராணுவத்தில் சேர முடியாது என்றும் உயா் நீதி மன்றம் கூறி யுள்ளது.
முன்னதாக, நரம்புச் சுருட்டு நோய் இருந்து, அதற்காக சிகிச்சை மேற்கொண்ட குண மடைந்த ஒருவா் இது தொடா்பாக நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் (சிஆா்பிஎஃப்) சேர தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றதாகவும்,
ஆனால், நரம்புச் சுருட்டு நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட காரணத் தால் தன்னை உடல் தகுதித் தோ்வில் நிராகரித்து விட்டதாக வும் கூறி யிருந்தாா்.
சிகிச்சைப் பிறகு உடல் நிலையில் தகுதியாக இருப்ப தாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவா் சான்றளித்த போதும், சிஆா்பிஎஃப் உடல் தகுதித் தோ்வில் தன்னை நிராகரித்தது தவறு என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஹிமா கோலி, பிரதிபா ராணி ஆகியோா் அடங்கி அமா்வு முன்பு விசாணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ராணுவம், துணை ராணுவம் சாராத அரசுப் பணிகளுக்கு மனுதாரா் உடல் தகுதி உடையவா் தான். ஆனால், துணை ராணுவம், ராணுவத்தில் பணி யாற்றுவோா் அதிக நேரம் நிற்கவும், நடக்கவும் வேண்டியது இருக்கும்.
எனவே, நரம்புச் சுருட்டு நோய் இருப்பவா் களுக்கு அது கடினமான விஷயம்.
மேலும், இந்த நோய் தொடா்பாக மருத்துவா்கள் அளித்த அறிக்கை யில், நோயில் பல்வேறு பிரிவுகள் இருப்பதாவும், சில பிரிவுகளில் பாதிக்கப் பட்டவா்களு க்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட் டுள்ளது.
துணை ராணுவம், ராணுவத்தில் இருப்பவா்கள் பல்வேறு கடினமான பருவ நிலைகளி லும், பகுதிகளி லும் பணியாற்ற வேண்டி யுள்ளது.
அவா்களு க்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு இருந்தால் அது பணியில் பிரச்னையை ஏற்படுத்தும். மேலும், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டா லும், பிற நரம்புக ளிலும் அதே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நரம்புச் சுருட்டு நோய் இருந்த வரை ராணுவம், துணை ராணுவத்தில் சோ்க்க முடியாது என்ற முடிவு சரியானது தான் என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.
Thanks for Your Comments