இஸ்லாமிய தேச பயங்கரவாதி களுடன் இணைய முற்பட்ட மூவருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை Bas-Rhin (Grand Est) நகர குற்றவியல் நீதிமன்றம் வழங்கி யுள்ளது.
குறித்த மூவரும் இரண்டு தடவைகள் சிரியாவுக்கு செல்ல முற்பட் டுள்ளனர். குறிப்பாக நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல் இடம் பெற்றதன் பின்னர் இவர்கள் சிரியா செல்ல முற்பட் டுள்ளனர்.
இது தவிர, மூவரும் தீவிர இஸ்லாம் மத அடிப்படை வாதம் கொண்ட வர்கள் எனவும், பயங்கரவாத சிந்தனை கொண்ட வர்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர, பயங்கர வாதம் தொடர்பாக பல்வேறு மதமாற்றும் வேலை களிலும் ஈடுபட்டுள்ள தாக அறிய முடிகிறது.
மூவருக்கு மான இந்த தீர்ப்பு திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை நடந்த நீதிமன்ற விவாதத்திற்கு பின்னரே அளிக்கப் பட்டுள்ளது.
அதில் ஒருவருக்கு 5 வருட தண்டனையும், இரண்டாம வருக்கு 7 வருட சிறைத் தண்டனையும், மூன்றாம் நபருக்கு 9 வருட சிறைத் தண்டனையும் வழங்கி Bas-Rhin நகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
Thanks for Your Comments