18 ஆண்டுகளுக்கு முன்னர் அன்டார்டிகா கடலில் உடைந்த மலை அளவு பெரிய பனிக்கட்டி தற்போது உருகி வருவதாக நாசா தகவல் வெளியிட் டுள்ளது.
அன்டார்டிகா கண்டத்தில் முழுவதும் பனி மலைகள் தான் உள்ளது. அனால், இந்த பனி மலைகள் புவி வெப்ப மயமாதலால் உருகி வருகின்றன.
பனி மலைகள் உருகுவ தால் கடல் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு அன்டார்டிகா வில் மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது.
இதன் நீளம் 296 கிமீ, அகலம் 37 கிமீ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பனிமலை என கூறப் பட்டது. இதற்கு பி15 என்று பெயரிடப் பட்டது.
இந்த பி15 பனிமலை உடைந்த பின்னர் கடலில் மிதந்து செல்ல துவங்கியது. தற்போது இது மேலும் உடைந்து 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து வருகிறது.
இது குறித்து நாசா பின் வருமாறு தகவலை வெளி யிட்டுள்ளது. பி15 பனிக்கட்டி கண் காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில் தான் இருக்கிறது.
ஆனால் இப்போது பனி மலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட் டுள்ளன.
அதன் முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன. எனவே இந்த பனிமலை உருகி காணாமல் போகும் என தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments