கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் !

0
கர்நாடக அமைச்சரவை யின் ஒரே பெண் அமைச்சராக, முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வருமான ஜெயமாலா சேர்க்கப் பட்டுள்ளார்.
கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் !
குமாரசாமி தலைமை யிலான கர்நாடகா கூட்டணி அமைச்சரவை யில் புதிய அமைச்சராக காங்கிரஸின் ஜெயமாலா புதனன்று பொறுப் பேற்றுக் கொண்டார். 

கர்நாடக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக திரைத் துறையினை சேர்ந்த ஒருவர் நேரடியாக அமைச்சராக பொறுப் பேற்றுக் கொள்வது இதுவே முதன் முறை யாகும்.

இவருக்கு முன்னதாக அனந்தநாக், உமாஸ்ரீ மற்றும் குமார் பங்காரப்பா உள்ளிட்டோர் துணை அமைச்சர் களாகவே 

முதலில் அரசில் பங்கேற்று ள்ளனர். ஜெயமாலா தற்பொழுது கர்நாடக சட்டப் பேரவையின் மேலவை உறுப்பி னராக உள்ளார்.

அமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மூன்று விஷயங்களை முதன் முறையாகச் செய்தவள் என்ற பெருமை எனக்கு உண்டு. 
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் கரநாடகாவின் 'பில்லவா' சமூகத்தி லிருந்து கர்நாடக மேலவைக்கு தேர்தெடுக்கப் பட்ட முதல் உறுப்பினர், கன்னட திரைத் துறையி லிருந்து தனிப் பொறுப்புடன் அமைச்சரவையில் பங்கேற்கும் 

முதல் உறுப்பினர் மற்றும் கர்நாடக சட்டப் பேரவையின் மேலவை குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட உள்ள பெண் ஆகியவை எனது சிறப்புகளாகும்.

நான் பொதுவாக எந்த பதவிக்கும் ஆசைப் பட்டதில்லை. எனது திறமைக்கு அங்கீகார மாகவே பதவிகளை அளிக்கிறார்கள். எனக்கு சட்ட விவகாரங்கள் துறை கிடைக்கும் என்று நினைக்கிறேன். 

எந்த துறை அளிக்கப் பட்டாலும் பணிபுரியத் தயாராக இருக்கிறேன். பெண்கள் தொடர்பான விவகாரங் களை கவனிக்கும் பொறுப்பு களை எதிர் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவின் மற்ற சில நடிகர்களை போல கட்சிகளை மாற்றிக் கொண்டே இருக்காமல் அரசியலில் ஈடுபட்டது முதல் காங்கிரஸி லேயே தொடந்து இருந்து வருகிறார். 

அதே சமயம் சபரிமலையில் கோவிலு க்குள் சென்றதாக இவர் மீது எழுந்த குற்றச் சாட்டால் சர்ச்சை உண்டானது நினை விருக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings