அமெரிக்காவில் பெற்ற மகளை தாய் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
கிரீனி கவுண்டியை சேர்ந்த வோண்டா ஸ்டார் ஸ்மித் என்ற பெண் தனது மகள் ஜெசி மோரிசன் (21) உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தனது மகள் ஜெசியை கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்மித் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் மகளின் சடலத்தை சாலை யோரத்தில் தூக்கி போட்ட நிலையில் பொலிசார் கண்டெடுத் துள்ளனர். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ஸ்மித் தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.
ஸ்மித் மீதான வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் மீதான இரண்டு கொலை வழக்கு களும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
அதாவது ஜெசியுடன் சேர்த்து அவர் வயிற்றில் இருந்த கருவையும் அவர் கொன்றது உறுதி யானது. குற்றவாளி என நிரூபிக்கப் பட்ட ஸ்மித்துக் கான தண்டனை விபரம் இனி தான் வெளியிடப் படவுள்ளது.
Thanks for Your Comments