புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் பல்லவராயன் பத்து கிராமத்தில் வசிப்பவர் கவியரசர். தாழ்த்தப் பட்ட குளத்தை சேர்ந்த இவரது தந்தை நடராஜன் ஒரு கூலி தொழிலாளி.
தனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே மருத்துவர் ஆகும் கனவோடு வளர்ந்த கவியரசர் படிப்பிலும் சோடை போகவில்லை.
தனது ஐந்தாம் வகுப்பிலேயே அரசு நடத்திய தனித்திறன் தேர்வில் முதலாவது மாணவனாக கவியரசன் வந்தார்.
இதனை அறிந்த அன்றைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சுகந்தி கவியரசனை அரசாங்க உதவி யுடன் தனியார் பள்ளியில் சேர்த்தார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அங்கேயே பயின்றார் கவியரசன்.
பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவதாக வந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் 1167 மதிப்பெண்கள் பெற்று சாதித்தி ருந்தார்.
கட் ஆப் மதிப்பெண் 198 பெற்று மருத்துவ ராக காத்திருந்த கவியரச னுக்கு நீட் எனும் அதிர்ச்சி காத்திருந்தது.
இருப்பினும் அந்த தேர்வில் கலந்து கொண்ட கவியரசன் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கால்நடை மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப் பட்டார்.
ஆனாலும் கால்நடை மருத்துவ படிப்பை தொடர மனமின்றி உடைந்த மனதுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அனிதாவின் இறப்பிற்கு பின் இலவச நீட் தேர்வு பயிற்சி நடப்பதை அறிந்த கவியரசன் அங்கு சென்று தனது நீட் தேர்விற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
சென்ற முறை தோற்றாலும் இந்த முறை 331 மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கவியரசனு க்காக இப்போது மருத்துவர் படிப்பிற்கான தனது இடத்தை பெற்று விட்டார்.
தாழ்த்தப் பட்ட ஏழையான கவியரசனின் தந்தை கட்டிட வேலை செய்து தான் தன்னையும் தம்பி தங்கையையும் படிக்க வைப்பதாக அவர் கூறினார்.
மேலும் ஏழ்மையை புரிந்த தான் மருத்துவரான பின் ஏழைகளுக்கு உதவ போவதாகவும் தெரிவித்தி ருக்கிறார்.
எல்லா தோல்வி களும் தோல்விகளல்ல. வெற்றிக் கான இன்னொரு வாய்ப்பு என்பதை சரியாக புரிந்து கொண்ட கவியரசன் நீட் தேர்வில் இரண்டாம் முறை கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக் கிறார்.
இந்தியாவில் சில காலமாக நீட் தேர்வு தோல்வி யினால் மாணவர் களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது.
அவர்களின் மனதை மாற்றும் வகையில் கவியரசனின் வாழ்க்கை இருப்பதால்
இதனை அறிந்த பின் மாணவர்கள் அவர்களது அடுத்த வாய்ப்பிற் காக நம்பிக்கை யோடும் தகுதியோடும் காத்திருப் பார்கள் என்று நம்புகிறோம்.
Thanks for Your Comments