தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தர விட்ட துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தர விட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி யவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
போராட்ட த்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, துணை வட்டாட்சி யர்கள் கண்ணன்
மற்றும் சேகர் உத்தர விட்டதாக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படை யில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறு பகுதிக்கும்,
சேகர் ஸ்ரீ வைகுண்டம் பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்த பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித் துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யராக இருந்த வெங்கடேச னும் பணியிட மாற்றம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments