வயது முதிர்ந்த ஓட்டுநர் களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து,
இனி அவர்கள் எழுபது வயதுக்கு பதிலாக எழுபத்தைந்து வயதில் மருத்துவ பரிசோதனை களை மேற்கொண் டால் போதும் என அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் நேற்று அறிவித்தது.
தற்போது 70 வயதை அடைந்த கார் ஓட்டு பவர்கள் இரண்டாண்டு களுக்கு ஒரு முறை மருத்துவர் ஒருவரால் பரிசோதிக் கப்பட வேண்டும்.
இந்த விதி தொழில் முறை கார் ஓட்டுநர் களுக்கும் பொருந்தும்.
கார் ஓட்டுவதற் கான உடல் தகுதியை பரிசோதி க்கும் மருத்துவ பரிசோதனைகள் கட்டாய மாக்கப் பட்டுள்ள சூழலில்,
அதற்கான வயதை உயர்த்த வேண்டும் என நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் வாக்களித்ததை யடுத்து இந்த சட்ட மாற்றம் கொண்டு வரப்பட் டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக் கான வயதை 70இலிருந்து 75 ஆக மாற்றும் இந்த மசோதாவை
நாடாளுமன்ற உறுப்பின ரான Maximilian Reimann கொண்டு வந்தார், அவரே 75 வயதைத் தாண்டியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் இந்த மசோதாவை எதிர்த்த வர்கள், தற்போதுள்ள விதியான 70 வயதில் பரிசோதனை களை மேற்கொள்ளு தல்,
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியதாக தெரிவித்தனர்.
புதிய விதி, முதியவர் களுக்கு மருத்துவ பரிசோதனைக் கான 300 சுவிஸ் ஃப்ராங்கு களை மிச்சப் படுத்து வதோடு,
இந்த பரிசோதனைக் காக அரசாங்க த்துக்கு ஏற்படும் செலவையும் குறைத் துள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments